May 12, 2015

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஜ.தே.கவும்-தி.துவாரகேஸ்வரன்!

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி, கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான ஒழுங்குளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பினில் அவர் தெரிவிக்கையினில்  இறுதிப்போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 2,000பேர் பிதிர்க்கடன்களைச் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்றல் நடைபெறும். அதன் பின்னர் நகுலேஸ்வரத்தில் யாகம் நடைபெறவுள்ளது.பதிவு இணைய செய்தி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்காக விசேட பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சார்ந்த நிகழ்வோ அல்லது இராணுவத்தினரை சீண்டும் நிகழ்வோ இல்லை. இறந்த ஆன்மாக்களை ஆசுவாசப்படுத்துவதற்கான நிகழ்வு மாத்திரமே. அனைவரும் கட்சி பேதமின்றி பங்குபற்ற வேண்டும். கடந்த அரசாங்கம் இத்தகைய நிகழ்வை தடுத்தமையால் இன்று வீட்டுக்குச் சென்றுள்ளது. அந்தப் படிப்பினையை வைத்து இன்றைய அரசாங்கம் அவ்வாறு செய்யாது என நினைக்கின்றோமெனவும் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்

No comments:

Post a Comment