மீண்டும் முதல்வராகும் ஜெயா பற்றி நீங்கள் அறிந்திராத அரிய விஷயங்கள்! (வீடியோ, படம் இணைப்பு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட்
செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா நகரத்தில் ஜெயராம் மற்றும் வேதவல்லி என்னும் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.
இவரது தந்தை மைசூர் ராஜாங்கத்தில் மருத்துவராய் பணிபுரிந்து வந்தார். ஜெயலலிதா அவர்களின் இரண்டாவது வயதில் அவரது தந்தை இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் தாய் பெங்களூர் நகரத்திற்கு குடிபெயர்ந்து சென்றார். பின்பு இவரது தாய் வேதவல்லி சென்னை மாகாணம் சென்று தமிழ் திரை உலகில் சந்தியா என்னும் பெயரில் நடிகையாக நடித்து வந்தார்.
சிறு வயது முதலே படிப்பில் சிறந்து விளங்கினார் ஜெயலலிதா அவர்கள். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை பெற்றுள்ளார். ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்! ஆரம்ப காலத்தில் இவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்ற போதும் இவரது தாயின் தூண்டுதலினால் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
இவர் 1970 மற்றும் 80-களில் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை. திரையில் மாபெரும் நடிகையாக ஜொலித்த ஜெயலலிதா அவர்கள் பின்னாளில் எம்.ஜி.ஆர். அவர்களின் துணையினால் அரசியலிலும் நுழைந்தார்.
திரையில் மட்டுமில்லாது அரசியலும் பல சாதனைகள் புரிந்து பெருந்தலைவராக உருவெடுத்தார் ஜெயலலிதா. இங்கு அவரை பற்றிய நீங்கள் அறியாத சில அறிய தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment