April 5, 2015

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை இரும்புக்கு களவெடுத்த இராணுவம்!

காங்கேசன்துறை அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையை இரும்புக்கு விற்பனை செய்யவென முழுமையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வணிக அமைச்சர் அனுப்பியுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வணிக அமைச்சர், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பரிசீலித்து அறிக்கை சமர்பிக்குமாறு நியமிக்கப்பட்ட குழு அறக்கையை தயாரித்து தாக்கல் செய்துள்ளதுடன் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தொழில்சாலையின் இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரிய விடயமாகியுள்ளது.
தொழிற்சாலையில் உள்ள சுண்ணாம்புக்கல் வைப்பு அதிகம் அகற்றப்பட்டுள்ளதாகவும் சீமெந்து உற்பத்திக்கு முக்கிய தேவையாக உள்ள அடுத்து காணாமல் போயுள்ளதாகவும் கேஸ் பயன்படுத்தி அடுப்பு வெட்டி அகற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுப்புடன் தொடர்புடைய அனைத்து பகுதிகளுக்கு வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் மூலப்பொருட்கள், நிலக்கரி, சீமெந்து, பேக்கேஜிங் தாவரங்கள் மற்றும் வாயு விசையாழிகள் அனைத்தும் அழித்துள்ளதாக அறிக்கையில் தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக மோட்டார்கள், கியர் பொக்ஸ் தொகை உள்ளிட்ட பல பொருட்கள், இயந்திரங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment