April 5, 2015

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இயக்க முயற்சி! பங்காளியாகின்றது இந்திய நிறுவனம்!

காங்கேசன்துறை சிமெந்து ஆலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் அதற்கு  தொழிற்சாலைக்கு நேரில் சென்று அதிகாரிகள் பார்வையிடுவதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படாது இழுத்தடிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.


தொழிற்சாலையை மீள இயக்கு வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக சிமெந்துக் கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளர் தலைமையிலான வல்லுநர்கள் குழு நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருவதாக இருந்தது. எனினும் பாது காப்பு அமைச்சின் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து நிலவும் தாமதம் காரணமாக அந்தப் பயணத்தைப் பிற்போட வேண்டி ஏற்பட்டுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனமும் இந்தியாவின் ஜே.கே சீமெந்தும் இணைந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.    இது தொடர்பில் சீமெந்துக்கூட்டுத்தாபனம் மற்றும் ஜே.கே சீமெந்தின் நிபுணர் குழுவினர் திங்கட்கிழமை காங்கேசன்துறைக்கு வருவதற்குத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட எமது பயணம் தொடர்பில் தீர்மானமான முடிவு எட்டப்படவில்லை.    இந்திய நிறுவனமான ஜே.கே. சிமெந்து  150 மில்லியன் அமெரிக்க டொலர்களை காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தில் முதலிடத் தயாராகவுள்ளது.

கடந்த வருடம் கோத்தபாய ராஜபக்ச­ பாதுகாப்புச்செயலாளராக இருந்தபோது ஜே.கே. நிறுவனத்தினர் காங்கேசன்துறைக்குச் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி கோரினர்.    அனுமதி அளித்த கோத்தபாய இந்த இடத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' எனத் தெளிவாகக் கூறியிருந்தாரென தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment