ஜேர்மன் விமான விபத்தில் பலியான பள்ளி மாணவி ஒருவர் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய உருக்கமான ‘குறுஞ்செய்தி’ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா(Barcelona) நகரிலிருந்து, ஜேர்மனின் டுசெல்டார்ப் (Düsseldorf) நகருக்கு 150 பயணிகளுடன் சென்ற, ஜேர்மன் விங்ஸ் A320 German Wings என்ற விமானம், பிரான்ஸ் நாட்டின் Digne மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலியானவர்களில் 67 பேர் ஜேர்மானியர்களென்றும், 45 பேர் ஸ்பானியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
ஜேர்மானியர்களில் 16 பள்ளிக் குழந்தைகளும், 2 ஓபெரா பாடகர்களும் அடங்குவர்.
ஜேர்மனியின் ஹால்டர்ன் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், 2 ஆசிரியர்களுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஜேர்மனி திரும்பும் போது விபத்தில் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில் சுற்றுலா சென்ற மாணவி Elena Bless(16) என்பவர் விமானம் புறப்படுவதற்கு முன் தனது தோழியான Philippa-வுக்கு Whatsapp மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘வீட்டிற்கு வருவதை நினைத்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், தாமதம் இல்லாமல் விரைவில் வீட்டிற்கே சென்று விடுவேன்’ என அனுப்பி இருந்தார்.
இதுகுறித்து Philippa கூறுகையில், சுற்றுலா முடிந்து வீட்டிற்கு செல்வதை Elena Bless பெரிதும் எதிர்பார்ந்திருந்தார் என்றும், சுற்றுலா சென்ற இடங்களை உடனுக்குடன் போட்டோ எடுத்து தனக்கு அனுப்பி மகிழ்ச்சியடைந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த உலகத்தை சுற்றி வர வேண்டும் என்பதை வாழ்நாள் கனவாக கொண்ட தன் தோழி, தற்போது உலகத்தை விட்டு போய்விட்டார் எனவும் உருக்கமுடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு மெழுகுவர்த்தி ஏற்றி பலியான மாணவர்களுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment