அமெரிக்காவில் உள்ள கணக்டிக்கட் மாநிலத்தில் "புஷ்நெல் பூங்காவில்" வரும் மே 18 ஆம் தேதி மாலை 5-7 மணிக்கு தமிழீழத்தில்
நடந்த இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடக்கவுள்ளது.
இதில் தமிழர்களாக அனைவரும் ஒன்று திரண்டு பங்குகொண்டு படுகொலை செய்யப்பட தமிழர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி அவர்களின் தியாகத்தை நினைவுகூறுவோம்.
இடம் : புஷ்நெல் பூங்கா, கேப்பிடோல் கட்டிடம் எதிரில், கணக்டிக்கட், அமெரிக்க
5 வருடம் சென்ற பிறகும் இனப்படுகொலைக்கான நீதியை நோக்கி எந்த முன்னேற்றமும் அடையாத நிலையில் இந்த ஒன்றுகூடல் மிக முக்கியமான நிகழ்வாகும். பெருந்திரளான ஒன்று கூடலின் மூலமே இந்த அரசுகளுக்கும் சர்வதேசதிற்க்கும் நாம் நமது வலியை சிறிதேனும் உணர்த்த முடியும்.
வருடத்தில் ஒருநாள் எமது வலியில் பங்கெடுக்க வேண்டுகிறோம் !
No comments:
Post a Comment