ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருக்கும் நிலையில் நீதி வழங்கத் தவறிய ஐ.நாவின் செயற்பாடுகளைக் கண்டித்து, காணமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரியும், ஆக்கிரமிப்பு இடங்களை விடுவிக்கக் கோரியும் மக்கள் பான் கீ மூனுக்கு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக காத்திருந்தனர் மக்கள்.
t
September 2, 2016
மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை பற்றி எழுதப்பட்ட ‘ஓர் வாழும் நாயகன்’ நூல் வெளியீடு!
மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் ஒன்று இன்று வியாழக்கிழமை (01.09.2016) மாலை மன்னார் குடும்ப நல பொது நிலையினர் பணியக மண்டபத்தில் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை போராடினார்!
ஒரு போதும் நாடு பிரிந்து போவதை ஆயர் அவர்கள் ஆதரிக்கவில்லை.அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத்தான் எதிர் பார்த்தார்.தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை முன்னெடுத்தார் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.
September 1, 2016
மைத்திரி மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சர்வதேச பொலிஸ்!
2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயம் மற்றும் கமத்தொழில் சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது ஊழியர்களில் ஒருவர் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சம் கோரியதாக அந்நாட்டு இணையத்தளம் வெளியிட்ட செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலேசானை வழங்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)