September 30, 2015

குறைந்த செலவில் வீடுகளை நிர்மாணிக்கும் பெல்ஜியம் தொழில்நுட்பம் இலங்கையில் அறிமுகம்!

உலகிலேயே குறைந்த செலவில் வீடுகளை நிர்மாணிக்கும் பெல்ஜியம் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக பெல்ஜியம் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் சிலருடன் அவர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
குறிப்பாக தனி வீடுகளை அமைத்துக் கொள்வோருக்கு இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் பயனளிக்கும் என்பதுடன் கட்டுமாண மூலப் பொருட்களுக்கான செலவையும் பெருமளவில் குறைத்துக் கொள்ள உதவும் என்பதாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறைந்த செலவில் வீடமைப்பதற்கான பெல்ஜியம் தொழில்நுட்பம் குறித்து எதிர்வரும் நாட்களில் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களை அறிவுறுத்தும் செயற்பாடுகளை சர்வதேச வர்த்தக அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

No comments:

Post a Comment