August 18, 2015

சம்பந்தன் தேர்தல் முடிந்ததும் தனது உண்மையான குணத்தை காட்டி விட்டார்!-வன்னியன் அருள்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.அதேவேளை, திருகோணமலை
மாவட்டத்தில் போட்டியிட்டவர்களில் ஐதேக சார்பில் எம். மஹ்ரூப் 35,456, விருப்பு வாக்குகளையும், இம்ரான் மஹ்ரூப் 32, 582 விருப்பு வாக்குகளையும் பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சுசந்த புஞ்சிநிலமே 19,953 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.இதேவேளை, மக்களால் மைத்திரிக்கு வழங்கிய ஆணை தொடரவேண்டும் என்பதே எமது விருப்பம் என கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பாக லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலே இவ்வாறு கருத்து வெளியிட்டார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அமைப்பதற்கும் தொடர்வதற்கும் கொடுக்கப்பட்ட ஆணை பாதுகாக்கப்பட்டு, அதற்கு உதவக் கூடிய அரசாங்கமாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம் அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தலில் மக்கள் உங்களை வெற்றிபெற வாக்களித்தது உங்களை மைத்திரியை நம்பி அவர்களுக்கு பின்னால் போகசொல்லி அனுப்பிவைக்கவில்லை முள்ளிவாய்கால் இனஅழிப்புக்கு நீதியான சர்வதேச விசாரனை தேவை என்று தேர்தல்மேடையில் நீங்கள் கூறியதற்காகவும் எம் தேசியதலைவரை நீங்கள் ஏற்றுகொண்டதுக்காகவும்தான் .அதை ஞாபகம் வைத்திருங்கள் நீங்கள் நம்பி பின்னால் போக துடிக்கும் மைத்திரியோ அல்லது ரணிலோ எந்த ஒரு சிங்களவனையும் யுத்தகுற்றச்செயலுக்காக தண்டிக்க தயாராக இல்லை என்று நேரடியாகவே கூறுகின்றார்கள்.அப்படி இருந்தும் அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது தமிழ் மக்களுக்கு நீதி தருவார்கள் என்று நம்பியா அல்லது உங்கள் பரம்பறைக்கே தேவையான பணத்துக்காகவா; தேர்தலில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் இல்லா விட்டால் தமிழ் மக்களின் பொறுமைக்கும் எல்லை உள்ளது என்பதை நினைவில் வைத்திருங்கள்.
நன்றி
வன்னியன் அருள்.!

No comments:

Post a Comment