August 14, 2016

முல்லைத்தீவு கேப்பாப்புலவுக்கு இராணுவ உயர் அதிகாரிகள் திடீர் விஜயம்!

இன்று பிற்கல் 4.00 மணியளவில் இராணுவ உயர் அதிகாரிகள் உலங்கு வானூர்தி மற்றும் தரைவழிப் பாதை ஊடாக கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


முல்லைத்தீவு பிரதான வீதிகளான A34 மற்றும் B260 வீதிகளில் விசேட இராணுவ சிறப்புப் படைப்பிரிவு, இராணுவப் பொலிஸ், மற்றும் போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க இராணுவ உயர் அதிகாரிகள் கேப்பாப்புலவு மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் படைப்பிரிவு முகாமிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் படைப்பிரிவு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களையும் தொழில்நுட்ப செயற்பாடுகளையும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு மாலை.5.30 மணிக்கு மீளச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment