July 13, 2016

மங்கள சமரவீரவுடன் நிஷா பிஸ்வால், ரொம் மாலினோவ்ஸ்கி சந்தித்துப் பேச்சு!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலும்  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்களாக நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கிக்கும் இடையில் நடந்த இந்தப் பேச்சுக்களின் போது, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment