July 30, 2016

தொடர் தீவிரவாத தாக்குதல்! பிரான்ஸின் அதிரடி நடவடிக்கை!

ஐரோப்பியா நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மைய நாட்களாக தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துள்ளன.


இதில் பிரான்ஸில் சற்று பாராதூரமான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில விடங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருக்கின்றது.

அந்த வகையில், பிரான்ஸில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் நிர்மானிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

பிரான்ஸ் நீஸ் நகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 84 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் புகுந்த இருவர், மூத்த பாதிரியாரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன், தொடர்புடைய நபர் ஏற்கனவே குற்ற வழக்கில் கைதாகி விடுதலையான ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிர் மறையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் மானுவேல் வால்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து, தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேவாலயம் ஒன்றில் மூத்த பாதிரியாரை படுகொலை செய்த பயங்கரவாதி, முன் கூட்டியே கைதான நிலையில், அவனது பின்னணியை விசாரித்து இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டிருந்தால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை முறியடித்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் தற்போது, கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில், பிரான்ஸில் பள்ளிவாசல்கள் நிர்மானிக்க வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு, தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

அத்துடன், பிரான்சில் உள்ள இமாம்கள், வெளிநாடுகளுக்கு சென்று, மத கல்வி பெறுவதற்கும் தடை விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment