July 30, 2016

ஆட்சி மாற்றத்தையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் மஹிந்த!

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


பாதயாத்திரையை குழப்புவதற்கு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் கொழும்பை நோக்கி செல்வதை யாராலும் தடுத்துவிட முடியாது.

பொதுமக்கள் எம்முடன் உள்ளமை உலகிற்கு வௌிப்பட்டுள்ளது. ஆகவே தடைகளை கடப்பது கடினமான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்க்கட்சியின் அரசாங்கத்திற்கு எதிரான பாதயாத்திரை இரண்டாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை உத்துவன்கந்தை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அங்குஅவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பொதுமக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுகின்றோம். ஆனால் அரசாங்கம் எம்மை முடக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

எமக்கு எதிராக வாக்களித்தவர்கள் கூட இன்று பாதயாத்திரையில் கலந்து கொண்டுஅரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.எனவே மாற்றம் தேவை என்பதுவௌிப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொள்ள போராட வேண்டும்.

கொழும்பில் பாதயாத்திரை முடியும் போது நாட்டின் அனைத்து மக்களும் எம்முடன் இருப்பார்கள்.ஆனால் உண்மைகளை வௌியிடவிடாது அரசாங்கம் ஊடகங்கள் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்தநிலை மாற வேண்டும்.

ஆட்சியாளர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்படுகின்றனர். பொலிசார் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் இன்று தலைகீழான சூழலே காணப்படுகின்றது.

ஆனால் மக்கள் என்னுடன் இருக்கின்றனர். எனவே தடைகள் பல்வேறு வழிகளில் ஏற்படுத்தப்படலாம். அவற்றை வெற்றி கொள்வோம். இதனை எதிர்த்து போராடி குரல் கொடுக்கும் போது இன்னோரன்ன அவதூறுகள் எமக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது. அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment