இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் படகு ஒன்றை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த படகு, கடந்த சனிக்கிழமையன்று கன்னியாக்குமரி முத்தும் கரையோரப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
75 அடி நீளமான இந்தப் படகு கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மனித கடத்தல்காரர்கள் இதற்கு போலி பதிவு இலக்கங்களை பதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 19ஆம் திகதியன்று மேல்மொனாவூர் அகதிகள் முகாமில் இருந்து 9 இலங்கை அகதிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களிடம் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல பணம் பெற்றதாக கூறப்படும் ஒருவர் பொள்ளாச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த 9 பேருக்காகவே இந்த படகு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment