June 10, 2016

வன்முறையை தூண்டும் மதுவை தடுக்க ஒன்றினைவோம்!- கிளிநொச்சியில் நடை பவனி!

வன்முறையை தூண்டும் மதுவை தடுக்க ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் கிராமத்தில்
சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையில் அக் கிராம மக்கள், ஒன்றிணைந்து இன்று காலை பத்துமணியளவில் ஒரு விழிப்புணர்வு நடை பவனி ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

இன்று காலை மாயவனூர் குளப்பிட்டியில் ஆரம்பிக்கப்பட்ட இவ் நடை பவனி மனைவி மக்கள் திண்டாட கசிப்பை கனிபோல் நினைகிறாயா?, விதவைகள் போதும் மதுவை நிறுத்து, எமது பிள்ளைகளை தலை நிமிர்ந்து வாழ வழி விடு எனும் பல கோசங்களை எழுப்பிய வாறும் பதாதைகளை தாங்கியவாறும் நடைபவனியாக மாயவனூர் சிவன் கோவில் வரை வந்து ஆலய முன்றலில் சட்ட விரோத போதைப் பொருள் தொடர்பான கருத்துரைக்கும் நடைபெற்றது.

கருத்துரைகளை கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி குனரோயன் அக்கிராம சேவையாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ஆகியோர் வழங்கினர்.

இவ் விழிப்புணர்வு நடைபவனியில் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி அதிகாரிகள், பொது அமைப்புக்களின் அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது.















No comments:

Post a Comment