June 19, 2016

அனல்மின் நிலையம்நுரைச்சோலை பழுதடைந்தமைக்கு அதிகாரிகளே காரணம் – சீனா!

நுரைச்சோலை அனல்மின் நிலையம் அடிக்கடி செயலிழந்தமைக்கு சிறீலங்கா அதிகாரிகளே காரணம் என சீனா அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டமைக்கு சிறீலங்கா மின்சார சபையின் சில அதிகாரிகளின் நடவடிக்கைகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நிறுவிய சீனாவின் சீமெக் என்ற நிறுவனம் 16 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை சிறீலங்கா அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
சில பொறியியலாளர்களின் நடவடிக்கைகள் மாத்திரமின்றி பயிற்சி மற்றும் அனுபவம் இல்லாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியமையாலேயே இந்தப் பிரச்சனை உருவாகியது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என மின்பொறியியலாளர் தொழிற்சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளை குற்றம்சுமத்தியது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவ்வாறு அதிகாரிகளைக் குற்றம் சுமத்தியிருந்தால் அது பாரிய தவறாகும் என சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்தார்.
எனினும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது உண்மை எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment