June 11, 2016

கனடா. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான விசா அற்ற போக்குவரத்து உடன்படிக்கை ?

கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்கு இடையில் எதிர்வரும் ஜுலை மாதத்திற்கு முன்னதாக விசா அற்ற போக்குவரத்து தொடர்பான உடன்படிக்கைக்கு மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.


ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் பல்கேரியா, ரோமானியா இவ்விரு நாடுகளும் கனேடிய விசா பெறவேண்டிய நிலையில் உள்ளன. இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் கனேடிய விசா பெறுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனினும் இவ்விரு நாடுகளும் விசா விலக்களிப்பை பெறுவதற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என கனடா கூறி வருகின்றது. குறிப்பாக இவ்விரு நாடுகளிலும் இடம்பெறும் ஊழல்கள் காரணமாக கூறப்படுகின்றது.

இது குறித்து தீர்மானம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னதாக திர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை என அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதிக்கு முன்னதாக தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தீர்மானம் எடுக்காத பட்சத்தில்; கனேடியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளிற்குச் செல்வதற்கு விசா பெறவேண்டிய நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகின்றது.

எனவே எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி இதற்கான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment