October 12, 2015

யேர்மனியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பதிலடி கொடுத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்!(வீடியோ இணைப்பு)

யேர்மனியில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தால் நடாத்தபட்ட ஈழத்தமிழர் வாழ்வுரிமை சிறப்பு மாநாடு – மாபெரும் செந்தமிழ்க் கலைமாலை நிகழ்வில் தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் , தமிழகத்தில் இருந்து தமிழினஉணர்வாளர்களும் , மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் சிறப்பு பேச்சாளர்கள் கலந்துகொண்டனர் .german3இவ் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகிய , மாவை சேனாதிராஜா , திரு யோகேஸ்வரன்  எவரும்  காலத்தின் தேவை கருதி வலிமை இழந்து வாடும் ஈழத்தமிழரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் மாநாட்டின் தலைப்பில் உரையாற்றும் போது “தமிழின அழிப்பு” எனும் சொல்லை ஒரு தடவை கூட உச்சரிக்கவில்லை என்பது நிகழ்வில் கலந்துகொண்ட மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது .இவ் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய தமிழ்த் தேசியசெயற்பாட்டாளர் திரு திருச்செல்வம் அவர்கள் இவ் விடையத்தை சுட்டி காட்டி தனது உரையை நிகழ்த்தியது புலம்பெயர் தமிழ் மக்கள் ஐநா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை தாண்டியும் விழிப்பாக தமது இறுதி இலக்கை நோக்கி செல்கின்றார்கள் என்பதை புடம் போட்டு காட்டியது .german1திரு திருச்செல்வம் அவர்கள் தொடர்ந்து உரையாற்றும் பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம்  உண்மையான நேர்மையான அரசியலை கொண்டுசெல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் .
தாயகத்திலும் , புலத்திலும் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி ஒரு குரலாக ஒலிக்க முயற்சித்த வேளையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதில் பங்கு வகிக்க தவறவிட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார் . அதே போல் தாயகத்தில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைமைகள் மீது பொய்களை விதைத்து அவர்களுக்கு இடையூராக இருக்க வேண்டாம் என்பதையும் வலியுறுத்தி பேசினார் .
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தால் நடாத்தபட்ட ஈழத்தமிழர் வாழ்வுரிமை சிறப்பு மாநாட்டில் அதன் தீர்மானம் ஒரு முழுமையானதாக அமைய வேண்டுமானால் , அதில் தமிழின அழிப்பு , தமிழின அழிப்புக்கான பன்னாட்டு சுயாதீன விசாரணை , சர்வதேச  கண்காணிப்பில் தாயகத்திலும் புலத்திலும் தமிழீழத்துக்கான  சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்றும் உள்ளடக்கப்பட வேண்டும் என  வலியுறுத்தினார்.திரு திருச்செல்வம் அவர்களின் முழுமையான உரையை இவ் ஒலி வடிவத்தில் ! .

No comments:

Post a Comment