ஆவடி அருகே பிளஸ் 2 மாணவி காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக அவர்கள் ஜோடியாக படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பிவிட்டு இறந்து உள்ளனர்.
தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில் தண்டவாளத்தில் கிடந்தனர்.
சம்பவ இடத்திற்கு ஆவடி ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமுத்தாய் மற்றும் போலீசார் சென்று உடல்களை கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்த இருவரும், நீண்ட நேரம் திருமுல்லைவாயல் ரெயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த இருவரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்று விசாரித்தனர்.
பிளஸ் 2 மாணவி
விசாரணையில் இறந்த வாலிபரின் அடையாளம் தெரிந்தது. அவர் அரக்கோணம் அடுத்த மோசூர் அருகே உள்ள நம்மாநேரி பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (வயது 19) என்பதும், சென்னை கிண்டியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் டிப்ளமோ ஏ.சி மெக்கானிக் படித்து வந்ததும் தெரியவந்தது.
அவருடன் இறந்து கிடந்த பெண், சென்னை வியாசர்பாடி சின்னதம்பி தெருவைச் சேர்ந்த தசரதராமன் மகள் ஜெயபிரியா (17) என்பதும், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்ததும் தெரியவந்தது.
காதல் ஜோடி தற்கொலை
அஜீத்குமார், முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, ஜெயபிரியா படித்து வந்த அதே பள்ளியில் படித்து வந்துள்ளார். அப்போது முதல் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்கள் திடீரென ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இறப்பதற்கு முன்பாக இருவரும் ஜோடியாக படம் எடுத்து அதனை ‘வாட்ஸ் அப்’ மூலமாக தங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
சம்பவம் குறித்து ஆவடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment