August 8, 2015

முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவருக்கு வவுனியாவில் தடுப்புகாவல்!

வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவரையும் ஒரு மாதகாலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த சீ.ஐ.டீ.யினருக்கு ஹோமாகம நீதிவான்
அனுமதியளித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பில், விசாரணைக்குட்படுத்தவே நீதிவான் அனுமதியளித்துள்ளார்.
வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட இருவரும், சத்யா மாஸ்டர் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சுரேஷ் மற்றும் நகுலன் என்றழைக்கப்படும் சுமதிபாலன் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் ஹோமாகம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ஒருமாதகாலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த நீதிவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment