August 10, 2015

மஹிந்த ஆட்சிக்கு வந்தால் சர்வதேச சமூகம் தலையிடும் என்பதில் உண்மையில்லையாம்!

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தால் தான் சர்வதேசம் தலையிடும், தமிழர்களுக்கு விடிவு உண்டு என்று கூறுவது உண்மைக்கு மாறானது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் வேட்பாளருமான மாவை சேனாதிராஜா
தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பிரதேசசபைக் கட்டிடத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், தமிழ் மக்களைப் பொருத்தவரையில் எங்களுடைய மண்ணிலே லட்சக்கணக்கான இராணுவத்தினரைக் குவித்து, எமது சொந்த இடங்களை ஆக்கிரமித்து, புத்தர்களே இல்லாத இடங்களில் புத்த விஹாரைகளைக் கட்டுகின்றார்கள்.
தமிழர்களே இல்லை என்கின்ற அளவிற்கு பௌத்தர்களுக்கு இந்த நாடு சொந்தமானது என்று சொல்லக்கூடிய அளவில் மஹிந்த ராஜபக்ச தன்னுடைய நிர்வாகத்தை கொண்டு சொன்றதை தமிழ் மக்கள் எதிர்த்தனர்.
ஆனால், மஹிந்த எங்களுடைய இனப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்பதற்காக எங்களுடை இனத்தின் அடையாளங்களை அழித்து விடப் போகின்றார்கள் என்பதற்காக தமிழ் மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தார்கள்.
ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் ஆட்சியிலிருந்தால் சர்வதேச சமூகம் தலையிடும் என்ற கருத்தை பலர் முன்வைக்கின்றார்கள். அது பகிரங்கமாக இன்னும் வெளிப்படவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்ற போது, அலரி மாளிகையில் இருந்த மஹிந்த ராஜபக்ச முப்படைத் தளபதிகளையும் அழைத்தார். எதற்காக, ஜனாதிபதித் தேர்தலில் தான் தோற்றுப் போனேன் என்பதையும் சிறிசேன வெற்றி பெற்றதையும் தேர்தல் அறிவிப்பை தாமதமாக்கினார்.
அதை மாற்றியமைக்க முயற்சித்தார். ஆனால், யுத்தமில்லாமல், ஆயுதமில்லாமல் ஒரு புரட்சி மக்களால் ஜனநாயக ரீதியாக செய்யப்பட்ட பொழுது அதற்கு விரோதமாக தேர்தல் முடிவை மாற்றியமைக்க வேண்டும் என்ற முயற்சியை நாங்கள் அறிவோம்.
ஜனநாயக தீர்ப்புக்கு எதிராக இந்த நாட்டிலே ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக மேற்குலக நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா ஆகியவற்றின் எச்சரிக்கைக்குப் பின்னர்தான் மஹிந்த அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் சென்றார்.
ராஜபக்ச ஆட்சியில் இருந்தால் தான் சர்வதேசம் தலையிடும், தமிழர்களுக்கு விடிவு உண்டு என்று சொல்லுவது உண்மைக்கு மாறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment