நாடாளுமன்ற தேர்தல்கள்களுக்கு முன்பதாக பல இடங்களில் வாக்காளர்களுக்கு மதுபானங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கபே அமைப்பு இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி பதுளையில் நேற்று 67 பேருக்கு வேட்பாளர் ஒருவரால், மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது மதுபான விநியோகத்தில் ஈடுபட்ட விற்பனை நிலையத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.
இதனை தவிர நுவரெலியா, லிந்துலையில் வாக்கு கப்பமாக மதுபான போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புத்தளம், மாத்தளை, குருநாகல் போன்ற இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பெரும்பாலும் நேற்றும் முன்தினமும் இந்த மதுபான விநியோகம் கிரமமாக இடம்பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
எனினும் பதுளையில் மாத்திரமே பொலிஸார் தமது நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment