August 10, 2015

போரின் வடுக்­க­ளினால் பாதிப்­ப­டைந்த தமிழ் பெண்கள் அவற்­றி­லி­ருந்து மீண்­டெழ வேண்டும்!

போரின் வடுக்­க­ளினால் இன்­று­வரை உடல், உள ரீதியில் பாதிப்­ப­டைந்த தமிழ் பெண்கள் அவற்­றி­லி­ருந்து மீண்­டெழ வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி வேட்­பாளர் திரு­மதி பத்­மினி சிதம்­ப­ர­நாதன் தெரி­வித்­துள்ளார்.

பெண்கள் பண்­பாட்டு மையத்தின் ஒழுங்­க­மைப்பில் போரால் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்­கான ஆற்­றுப்­ப­டுத்தல் அரங்கு கடந்த வியா­ழக்­கி­ழமை கோப்பாய் முத்துச் சிற்பி அரங்க கூடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி வேட்­பாளர் திரு­மதி பத்­மினி சிதம்­ப­ர­நாதன் தலை­மையில் நடை­பெற்­றது.இந்த ஆற்­றுப்­ப­டுத்தல் அரங்கில் போரால் பாதிக்­கப்­பட்டு கண­வனை இழந்த, பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­களைச் சேர்ந்த பல பெண்கள் பங்கு பற்றி இருந்­தார்கள். இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,அரங்கச் செயற்­பா­டு­களின் ஊடாக ஆற்­றுப்­ப­டுத்தல் என்­பது பெண்­களின் துன்ப துய­ரங்­க­ளையும், மனத் தடை­க­ளையும் விடு­வித்து அவர்­களை சிந்­த­னைக்கும், புதிய செயற்­பா­டு­க­ளுக்கும் ஊக்­கு­விக்கும்.ஒவ்­வொரு பெண்­களும் மற்­ற­வர்­க­ளுடன் கலந்து பேசி உற­வாடி தம் தடை­களை வென்று புதிய மனங்­க­ளுக்­குட்­படும் போது அவர்­களால் தம் எதிர்­காலம் பற்­றிய நம்­பிக்­கையும் கடந்த கால அவ­லங்­களை மீட்டிப் பார்த்து தெளி­வ­டை­யவும் முடியும்.கடந்த காலப் போரின் தாக்­கத்தால் பெண்கள் கண­வனை இழந்தும், அங்­க­வீ­ன­மாயும் பெண் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளா­கவும் என்று பாதிப்­புக்­களை சுமந்து வரு­கின்­றனர்.
இவ்­வாறு சொத்­துக்­க­ளையும் உயிர்­க­ளையும் இழந்து நாளாந்தம் நெருக்­க­டிக்கு உள்­ளாகி வரும் எம் பெண்­க­ளுக்­கான ஆற்றுப்படுத்தல் அரங்க செயற்­பாடு இன்­றைய தேவை­களுள் அடிப்­ப­டை­யான தேவை­யாக உள்­ளது.2009 இன் பின் உட­ன­டி­யாக செய்ய வேண்­டிய இக்­கா­ரி­யத்தை யாருமே செய்ய வில்லை ஆற்­றுப்­ப­டுத்தல் ஊடாக பெண்­களை ஆளு­மையும் சக்­தியும் உள்ளவர்­க­ளாக மாற்ற முடியும் என்­பதில் எமக்கு நம்­பிக்கை உண்டு. நாம் அவ்வா­றான பல செயற்­றிட்­டங்­களை எங்கள் பெண்­க­ளுக்­காக உரு­வாக்கி வெற்­றியும் அடைந்­துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment