மன்னாரில் கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளி நகுலேஸ்வரன் கிருஷ்ணசாமி தொடர்பான விசாரணைகள் இருட்டடிப்பு
செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது மனைவி கவிதா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளர்ர்.கடந்த வருடம் நொவம்பர் மாதம் 12ம் திகதி மன்னார் ஸ்ரீ வெல்லாங்குளம் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையின் பின்னணியில் மன்னாரைச் சேர்ந்த பிரபல முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சம்மந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன், இதற்கு குறித்த கிராமத்தின் கிராம சேவகரும் சம்மந்தப்பட்டுள்ளார்.இது தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனினும் விசாரணைகள் மந்த நிலையில் இடம்பெற்று வருவதாகவும், அரசியல் அழுத்தமே இதற்கான காரணம் என்றும் அவரது மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்

No comments:
Post a Comment