June 4, 2015

காலியை வீடியோ செய்த விமானம்.!

காலி – அஹங்கம – மாகந்த பிரதேசத்தில் விழுந்த சிறிய ட்ரோன் ரக விமானம் (ஆகாயத்தில் இருந்து வீடியோ எடுக்கம் கருவி) தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விமானத்தை தூரத்தில் இருந்து ஒருவர் இயக்கியுள்ளதாகவும் இயக்கியவர் யார் என்பது
இன்னும் தெரியவரவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். வீட்டுத் தோட்டத்தில் விழுந்து கிடந்த விமானம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். குறித்த விமானத்தை அஹங்கம பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment