கவனக் குறைவாக காரை ஓட்டிச் சென்று ஒருவர்
உயிரிழக்கவும் சிலர் காயமடையவும் காரணமான இலங்கையர் ஒருவருக்கு டோஹா
குற்றவியல் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
இவ்விபத்தில் வளைகுடா இணை ஒப்பந்த குடியுரிமையாளர் ஒருவர் உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை நபருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையை விதித்துள்ள நீதிமன்றம், மூன்று மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்துள்ளது.
அத்துடன் காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து கொல்லப்பட்ட நபருக்கு இழப்பீடாக 2 லட்சம் கட்டார் ரியால்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி விபத்து சல்வா என்ற வீதியில் நடந்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர் ஓட்டிச் சென்ற காரின் சில்லு ஒன்று சேதமடைந்துள்ளது. இதனால், வாகனத்தை ஒட்டிச் சென்றவர் அதனை கட்டுப்படுத்த முடியாமல், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியுள்ளார்.
மோதுண்ட கார் பல முறை புரண்டு விழுந்ததால், அதில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment