ஈழத்தில் தமிழினப் படுகொலை நடந்தேறி கிட்டத்தட்ட ஆறு
வருடங்கள் நிறைவேற போகும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு
இன்னும் நீதி கிடைக்காத சூழலே நிலவி வருகிறது. ஈழத்தமிழர்களின் ஒரே
கோரிக்கையான சுதந்திர தமிழீழ நாட்டை பிரகடனம் செய்வதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரி களத்திலும், புலத்திலும், தாய் தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்களை மக்கள் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் இந்த வேலையில்,
நடந்த இனப்படுகொலையை மறைக்கும் முயற்சியையும், தமிழீழ கோரிக்கையினை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இந்திய-சிங்கள-மேற்குலக கூட்டுசக்திகள் ஈடுபட்டு வருகின்றன. ஈழத்தில் சுமுகமான சூழல் நிலவுவது போல் ஒரு போலி பின்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
நடந்திருக்கும் ஆட்சிமாற்றத்தின் மூலம் சிங்கள பேரினவாதத்தின் தலைமை தான் மாறியிருக்கிறதே தவிர தமிழர் தரப்பிற்கான தீர்வு இன்னும் எட்ட படவில்லை.
2009 போருக்கு பிந்தைய காலத்தில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இன்னும் துரிதபடுத்தப்பட்டிருக்கிறது. ராணுவ மயமாக்களும், சிங்கள குடியேற்றங்களும் பெரிதளவில் தமிழர் பகுதிகளில் சத்தமின்றி நடந்தேறி வருகிறது.
நாவல்குழியூர், யாழ்ப்பாணத்தில் உள்ள மத்தகள், மணலாறு ஆகிய பகுதிகள் சமிபத்தில் சிங்களமயமாக்க பட்ட கிராமங்கள். வன்னி பகுதியில் உள்ள ஒரு தமிழ் கிராமத்திற்கு ராஜபக்சேவின் மகனின் பெயரில் “நாமல்காமா’ என பெயர் மாற்றம் செய்யபட்டிருப்பதே இதற்கு சான்று.
தமிழர்களில் பொருளாதாரத்தை குறிவைத்து நசுக்குவத்தின் மூலமாக தமிழர்களுக்கு எதிரான ஒரு பொருளாதார போரினை நடத்தி வருகிறது சிங்களம்.
தமிழ் மக்களின் பாரம்பரிய தொழிலான விவசாயத்தையும், மீன்பிடி தொழிலையும், இப்பொழுது சிங்கள ராணுவமே செய்யதொடங்கி விளையும் பொருட்களை பாதி விலைக்கு விற்பதின் விளைவாய் தமிழர்கள் வேலை இன்றி அன்றாட வாழ்விற்கு அல்லல்படும் நிலையம், தங்களது தொழில்களை விட்டு பிழைப்பிற்காக வேறு இடங்களுக்கு குடிபெயரும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
சிறு தொழில்கள் மட்டுமல்லாமல் தமிழ் பகுதிகளில் இயங்கிய தொழில்சாலைகளான (காங்கேசன் துறையில் இயங்கிவந்த சிமெண்ட் தொழில்சாலை, மட்டகளப்பு பகுதியில் இருந்த காகித தொழில்சாலை, பரந்தன் பகுதியில் இயங்கி வந்த ரசாயின தொழிச்சாலை போன்ற பல தொழில்சாலைகள்) மூடபட்டிருப்பதே இதற்கு சான்றாகும்.
ஒரு சாதாரண சிங்கள ராணுவ சிப்பாய் தமிழ் பெண்ணை மணந்தால் அவருக்கு கேப்டன் பதவி, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால் சம்பள உயர்வு என நச்சு திட்டங்களை அறிவித்து தமிழர்கள் எதிரான கலாச்சார படுகொலையை சிங்கள அரசு செய்து வருகிறது. இந்த சூழல் தொடர்ந்தாள் எதிர்காலத்தில் சிங்களம், சிங்கள தமிழ் கலப்பினம் மட்டுமே எஞ்சும் ஒரு அபாய நிலைக்கு சிங்களம் நம்மை நகர்த்திவருகிறது.
இந்த சூழலில் ஆட்சிமாற்றத்திற்கு பிறகு தமிழர்களுக்கு நல்ல சூழல் நிலவுவதுபோல் பின்பத்தை ஏற்படுத்திவரும் இந்தியா, ஐநா, அமெரிக்கா கூடுச்சதியை அம்பலப்படுத்தும் நோக்கில் தமிழினப்படுகொலை உக்கிரமாக நடந்த மே மாதத்தை தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்க்கும் போரட்ட மாதமாக அறிவித்ததோடு வரும் மே 5ம் திகதி முதல் பொதுவாக்கெடுப்பு கோரிக்கையினை முன்வைத்து தொடர் போராட்டங்களை நிகழ்த்தவிருக்கும் ‘தமிழர் விடியல் கட்சி’யின் காலத்தின் தேவையான இந்த போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் இயங்கி வரும் சிங்கள வர்த்தக நிறுவனமான ‘தம்ரோ பர்நிச்சர்’ நிறுவனத்தை வரும் மே 10ம் திகதி காலை 10மணி அளவில் முற்றுகையிட்டு தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் போராட்டம் நடக்கும் என்பதினை இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்துகொள்கிறோம் .
தமிழ்நாட்டில் மட்டும் 22 கிளைகள் வைத்திருக்கும் ‘தம்ரோ பர்நிச்சர்’ என்னும் சிங்கள நிறுவனம் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 30கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி வருவது வேதனையான விடையம்.
தமிழக அரசு எப்படி சிங்கள கிரிக்கெட் வீரர்களை தமிழகத்தில் தடை செய்ததோ, எப்படி பயிற்சிக்கு வந்த சிங்கள ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்பியதோ அதே போல் தமிழகத்தில் இயங்கி வரும் சிங்கள வர்த்தக நிறுவனங்களை இழுத்து மூடினால் தான் 2013ம் ஆண்டு தமிழக சட்டமன்றதில் போடப்பட்ட இலங்கை மீது பொருளாதார தடை போட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அர்த்தம் இருக்கும்.
எனவே தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுத்து தமிழர்களின் உணர்வுக்கு மதிபளித்து இங்கு இயங்கி வரும் சிங்கள வணிக நிறுவனங்களின் மீது தடையை பிறப்பிக்க வேண்டும் என்பதை இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment