March 26, 2015

கிளிநொச்சி இ.போ.சபையில் சாரதிகள் பற்றாக்குறை!

கிளிநொச்சி வீதிகளில் சாரதிகளின் பற்றாக்குறையால் பேரூந்துகளை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக கிளிநொச்சி வீதி முகாமையாளர் சிவபாதசுந்தரம் ஜீவானந்தன் தெரிவித்துள்ளார். 


இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் போதியளவு இருந்த போதிலும், சாரதிகளின் பற்றாக்குறையால் பேரூந்துகளை மக்கள் சேவைக்கு பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு தமது சேவையை திறம்பட வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சாரதிகள் பற்றாக்குறை காரணமாக பேரூந்து சேவைகள் ஒழுங்காக முன்னெடுக்கப்படாதமையால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment