விமல் வீரவன்சவிடம் இன்றும் விசாரணை!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்றைய தினம் விசாரணை நடத்தியுள்ளது.
அவரின் சொத்து சேகரிப்பு தொடர்பில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் 2 மணித்தியாலங்கள் இந்த விசாரணை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அவரது மனையில் ராஜதந்திர கடவுச் சீட்டு மோசடி தொடர்பில் சிறிலங்காவின் காவற்துறையினரால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment