ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ ஏர் பஸ் ஏ-320 விமானம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு கடந்த 24-ந் தேதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது.
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் ஆல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர்.
அவர்களில் 72 பேர் ஜெர்மானியர்கள், 51 பேர் ஸ்பெயின் நாட்டினர், 3 பேர் அமெரிக்கர்கள். இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கொலம்பியா, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, ஈரான், நெதர்லாந்து, மொராக்கோ நாட்டினரும் பலியானவர்களில் அடங்குவர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்து, விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன. அதில் விமானிகளில் ஒருவர், விபத்துக்கு முன்னதாக விமானி அறையை விட்டு வெளியே சென்றதும், அவர் திரும்ப வந்தபோது விமானி அறை கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக புலன் விசாரணை நடத்துகிற அதிகாரி ஒருவர், “வெளியே சென்ற விமானி, மீண்டும் வந்து கதவை லேசாக தட்டியுள்ளார். பதில் இல்லை. அதன்பின்னர் கதவை வலுவாக தட்டியுள்ளார். அதற்கும் பதில் இல்லை. அதன்பின்னர் எந்தப் பதிலும் இல்லை என்பது விமானி அறை ஒலிப்பதிவு கருவி மூலம் தெரிய வந்துள்ளது” என கூறியதாக நியூயார்க் டைம்ஸ் ஏடு கூறுகிறது.
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வரை ஓயப்போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறினார். பிரான்ஸ் விசாரணை குழுவோ, “ விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் எதற்காக கீழே இறங்கியது என்பது குறித்து எந்த முடிவுக்கும் இப்போதைக்கு வர முடியவில்லை.
இப்போதுதான் ஒரு ஆடியோ பைல் கிடைத்திருக்கிறது. அதை ஆய்வு செய்ய வேண்டும்” என கூறியது.
விசாரணையில் தொடர்புடைய ராணுவ உயர் அதிகாரி ஒருவர், “விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி, விமானிகள் இடையே மிகவும் இணக்கமான வகையில் உரையாடல்கள் நடந்ததைத்தான் காட்டுகிறது. விமானிகளில் ஒருவர் வெளியே சென்றதும் தெரிகிறது.
அவர் எதற்காக வெளியே சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால், விமானத்துக்கு முடிவு ஏற்பட்டபோது, விமானி அறையில் ஒரு விமானிதான் இருந்திருக்கிறார், அவர் கதவைத் திறக்கவில்லை என்பது தெளிவு” என கூறியதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
தீவிரவாத தாக்குதல் குறித்த யூகம் எழவில்லை என்று பிரான்ஸ் உள்துறை மந்திரி பெர்னார்டு காஸிநியூவ் கூறி உள்ளார். என்னதான் நடந்தது என்பதை இப்போது உறுதியாக கூற முடியாதபோதும், நடுவானில் விமானம் வெடித்து சிதறி இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
இதன் மூலம் துணை விமானி சதி செய்துதான், விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், எதற்காக அவர் இந்த சதியில் ஈடுபட்டார், அதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா என்பது இனிதான் கண்டறியப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே பாரீஸ் நகரில் பிரான்ஸ் அரசு வக்கீல் பிரைஸ் ராபின் "கூறும் போது
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, கழிவறைக்கு சென்றிருக்கிறார். அவரால் மீண்டும் விமானி அறைக்குள் செல்ல முடியாமல் போய்விட்டது. துணை விமானி ஆன்ட்ரூஸ் லூபிட்ஸ் வேண்டுமென்றே ஆல்ப்ஸ் மலையின் மீது விமானத்தை கீழாக செலுத்தி உள்ளார். அவரது நோக்கம், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவதுதான். கருப்பு பெட்டியில் இருந்த விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி மூலம் இந்த முடிவுக்கு வரவேண்டி உள்ளது. என்று கூறி உள்ளார்.
துணை விமானி ஆன்ட்ரூஸ் லூபிட்ஸ் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு அருகே உள்ள மான்டபாரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். டுசல்டார்ப் நகரிலும் அவருக்கு ஒரு அபார்ட்மென்ட் இருந்துள்ளது. அவருக்கு ஒரு காதலியும் இருக்கிறார்.
இந்நிலையில் ஜெர்மனி போலீசார் மான்டபாரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்த லுபிட்ஸின் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் சோதனையின்போது முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அது என்னவென்று தெரிவிக்க மறுத்துவிட்டனர். மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த லுபிட்ஸுக்கு தீவிரவாதிகளுடன் சம்பந்தம் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment