August 23, 2014

சிறீலங்கா பெண் அமைச்சரின் மேற்பார்வையில் பாலியல் தொழில்!

இலங்கையின் அதிகாரமிக்க அமைச்சுப் பதவி வகிக்கும் பெண் அரசியல்வாதியொருவரின் வழிகாட்டலில் பாலியல் தொழில் மையங்கள் நடத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பான தகவல்களை அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு நெருக்கமான சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

குறித்த பெண் அமைச்சரின் மாதிவெல உத்தியோகபூர்வ இ்ல்ல முகவரிக்கு எழுதப்பட்ட குத்தகை (லீஸ்) ஆவணத்தைக் கொண்டு, பாலியல் மையங்கள் செயற்படுவதாகவும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

கொழும்பில் மட்டுமன்றி கேகாலை, அளவ்வ போன்ற பிரதேசங்களிலும் இவரின் வழிகாட்டலின் கீழான பாலியல் மையங்கள் தொழிற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த அமைச்சரின் பாலியல் தொழில் நிலையம் ஒன்றைச் சோதனையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்து மதுபானம் மற்றும் போதைப் பொருட்களைக் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment