August 16, 2016

பிரான்ஸ் கடற்படை கப்பல் திருமலையில்!

பிரான்ஸ்சின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக ஸ்ரீலங்காவின் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
கடற்படையின் பாரம்பரியங்களுடன் குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.


இதனையடுத்து கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளையிடும் அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண கடற்படை கட்டளைக்கான தலைமையத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண பிரதி கட்டளை தளபதி மெரில் சுதர்சன உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் நினைவுபரிசுகளும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஸ்ரீலங்காவில் சஞ்சரிக்கும் பிரான்ஸ் கப்பல், ஸ்ரீலங்கா கடற்படை ஏற்பாடு செய்துள்ள திட்டங்கள் சிலவற்றிலும் பங்கேற்கவுள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் நியூ ஒர்லியன்ஸ் கடற்படை கப்பல் ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் கடற்படை கப்பலும் ஸ்ரீலங்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment