June 18, 2016

மஹிந்தவின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் தொடர்பில் தகவல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்புடைய சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.


அந்த புகைப்படம் தொடர்பில் செய்திகள் வெளியாகிய நிலையில் அந்த புகைப்படங்கள் எடிட் செய்து தயாரிக்கப்பட்ட புகைப்படம் எனவும், அந்த செய்தி போலியானதெனவும், மஹிந்த ராஜபக்ச தரப்பினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த நாட்களில் மஹிந்த ராஜபக்சவுடன் ஜப்பான் விஜயத்தில் ஈடுபட்டுள்ள தெஹிவளை-கல்கிசை மாநகர சபை மேயர் தனசிறி அமரதுங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலே இந்த புகைப்படம் முதன் முதலாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. ஏனைய அனைவரும் அவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்தே பெற்றுக் கொண்டே குறித்த புகைப்படத்தை பிரசுரித்துள்ளனர்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவ ஆரம்பித்ததனை தொடர்ந்து சமகமதனசிறி அமரதுங்க என்பவரினால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த புகைப்படம் தனசிறி அமரதுங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பத்தில் இருந்து பெற்றுக்கொள்வதனை உறுதி செய்யும் வகையில் ஒரு புகைப்படமும் கிடைத்துள்ளன.

மஹிந்த தரப்பினர் கூறிவதனை போன்று அந்த புகைப்படம் தயாரிக்கப்பட்ட புகைப்படம் என்றால் அதனையும் மஹிந்த ராஜபக்சவுடன் இந்த நாட்களில் ஜப்பான் விஜயம் மேற்கொண்டுள்ள தனசிறி அமரதுங்கவினாலே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment