போலி வீசா அனுமதியை பயன்படுத்தி கட்டார் நாட்டின் ஊடாக இத்தாலிக்கு செல்ல முயற்சித்த கடற்படை சிப்பாய் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாய என்ற பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபர் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவர் கடந்த 13 ஆம் திகதி இலங்கையில் இருந்து கட்டார் சென்றதாக நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கட்டார் விமான நிலைய அதிகாரிகள் இவரது ஆவணங்களை சோதனையிட்ட போது அவரது கடவுச்சீட்டில் இருந்த இத்தாலி வீசா போலியானது என கண்டுப்பிடிக்கப்பட்டது.இதனையடுத்து கட்டாருக்கு சொந்தமான விமான சேவை நிறுவனத்தின் விமான் மூலம் சந்தேக நபரை, கட்டார் அதிகாரிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கிய போதே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான கடற்படை சிப்பாய் 10 வருடங்கள் கடற்படையில் கடமையாற்றி வருகிறார். 10 நாட்கள் விடுமுறை பெற்றுக்கொண்டுள்ள இவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது சந்தேக நபரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடத்தும் விசாரணைகளில் பின்னர், அவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.


No comments:
Post a Comment