மனிதநேயம் தோல்வியுற்ற நாளாகவும் சர்வதேசம் வெட்கி தலைகுனிந்த நாளாகவும் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 9 ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில்
Essen நகரில் அமைந்துள்ள நினைவுத்தூவி வளாகத்தில் நடைபெற்றது .
இவ் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் செஞ்சோலை சிறுவர்களை மனதில் பதித்து சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தி வணங்கினார்கள் . தொடர்ந்து செஞ்சோலை படுகொலை நினைவுப் பதிவு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினரால் வாசிக்கப்பட்டது . அதை தொடர்ந்து கலந்துகொண்ட மாணவர்களால் செஞ்சோலை படுகொலையை நினைவேந்தி உணர்வு வரிகள் வழங்கப்பட்டது .
இறுதியில் தாயக சமகால அரசியல் நிலைமை சார்ந்து உரையாடப்பட்டு மாணவர்களின் கனவுகள் நினைவேற புலம்பெயர் மக்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு உழைப்போம் என்று உறுதி எடுக்கப்பட்டு செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது .
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி


No comments:
Post a Comment