August 16, 2015

சுவிசில் நினைவு கூரப்பட்ட செஞ்சோலை வளாகப் படுகொலையின் 9ம் ஆண்டு நினைவுநாள்! (படங்கள் இணைப்பு)

இனவெறி சிங்கள அரச வான்படையின் திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலை வளாக
மாணவச் செல்வங்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில் கனத்த இதயங்களுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவுநாளில் பொதுச்சுடரேற்றலுடன், செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களைத் தோற்றுவிக்க காரணமாய் இருந்த முதற் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களுக்குரிய ஈகச்சுடரினைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கான ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் செஞ்சோலை சிறார்களின் நினைவு சுமந்த பாடல்கள் தமிழர்களின் நெடிய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத வடுவாக மாறிய படுகொலையின் நினைவுகளை மீட்டியது.நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளினது நினைவுரைகளுடன் சமகால அரசியல் உரைகளை தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சிய பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டும் 21.09.2015 அன்று ஜ.நா நோக்கி அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க ஆயத்தமாகுமாறு அனைத்து தமிழ் உறவுகளையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிமையோடு இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றது.
su-5சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுsu-4su-3
su-1su-2

No comments:

Post a Comment