அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டவர்களை இல்லாது ஒழிக்க மக்கள்
முன்வந்துள்ளதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்
தெரிவித்தார்.
வவுனியா பண்டாரிகுளம் விபுலாநந்தாக்கல்லூhயில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர்போட்டியின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த பாடசாலையில் பௌதீக வளங்கள் போதியளவில் இல்லை. ஆனால் இலங்கையினை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக அபிவிருத்தி செய்வதாக சொன்னவர்கள் அலரியமாளிகையை அபிவிருத்தி செய்துள்ளனர். எங்களுடைய பணத்தையே அவர்கள் சூறையாடி கொண்டு சென்று வைத்தீருந்தனர்.
யுத்தம் நிறைவடையும் காலத்தில் எங்களுடைய மக்களினுடைய பணத்தையும் நகைகளையும் கென்டெய்னர்களில் சூறையாடினர். எனினும், எமது சிறார்களுக்க படிப்பதற்கு கட்டிடம் இல்லை. இவற்றுக்கெல்லாம் யார் உடந்தையாக இருந்தார்கள்.
எங்களை எங்கள் மண்ணில் இருந்து அகற்றுவதற்கு எங்களுடைய மக்கள் சிலரே அரசாங்கத்துடன் கைக்கூலிகளாக இருந்து வந்தனர். இன்று இந்த கைக்கூலிகளை முற்றாக ஒழிப்பதற்கு நாங்கள் முன்வருகின்றோம்.
இவர்களால் தான் நாம் பதிக்கப்பட்டுள்ளோம். இவர்களின் வழிகாட்டலில்தான் தெற்கில் இருந்து அரசாங்கம் வந்து எம்மை தாக்கியது. என தெரிவித்தார்.

No comments:
Post a Comment