முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் விசாரணைக்காக அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் அந்த விசாரணைகளை பகிஷ்கரித்திருந்ததால் இன்று கைதுசெய்யப்படலாம் என நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்தை மேற்கொள்காட்டி எமது தளம் செய்தியில் தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையிலேயே நாமல் ராஜபக்ச இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
70 மில்லியன் ரூபா நிதி மாயமாகியுள்ளத தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு இன்றைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
70 மில்லியன் ரூபா நிதி மாயமாகியுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காகவே நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ரகர் விளையாட்டை மேம்படுத்துவதற்காக சிலோன் பீரிமியர் விளையாட்டுக் கழகத்திற்கு 70 மில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொடுக்குமாறு கிறிஸ் நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் இந்த நிதி தனிப்பட்ட கணக்கிற்கே வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளுக்காகவே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றது.
இதேவேளை கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, மஹிந்தநந்த அளுத்கமகே உட்பட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர்களது தரப்பு நியாயப்பாட்டை தெளிவுபடுத்துமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்தர்கள் பத்து பேரை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தநந்த அளுத்கமகே ஊடகங்களுக்கு கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment