வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள விவசாய கல்லூரிக்கு முன்பாக பொருளாதார மையத்தை அமைக்காதீர்கள் எனக் கோரி, விவசாய கல்லூரி மாணவர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஏ – 9 வீதியின் ஓரமாக நின்று ஒரு மணித்தியாலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமது பாடசாலைக்கு முன்பாக பொருளாதார மையத்தை அமைத்து, தமது கற்றலுக்கு பாதிப்பை ஏற்பாடுத்தாதீர்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட மாகாணத்தில் உள்ள ஒரேயொரு விவசாய கல்லூரியை இல்லாது செய்யாதீர்கள் என்பதனையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய விவசாய கல்லூரி மாணவர்கள் எம் தலைமைகளே எமது கல்லூரியை பாதுகாத்து தாருங்கள், கற்பதற்கான தகுந்த சூழல் வேண்டும், வயல்களின் முடக்கம் வறுமையின் தொடக்கம், பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திற்கு பொருத்தமற்றது என்ற பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.

No comments:
Post a Comment