பிரித்தானியாவில் இருந்து திருமணத்துக்காக இலங்கை சென்றிருந்தபோது அதிகாரிகளால்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பிரித்தானிய வாழ் தமிழர் மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ளார்.
“த காடியன்” வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனில் வசிக்கும் 36 வயதான வேலாயுதப்பிள்ளை ரேணுகருபன் என்பவரே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அமைச்சு, இலங்கையில் உள்ள முக்கிய மனித உரிமை சட்டத்தரணி ஆகியோரின் முயற்சியை அடுத்தே அவர் லண்டன் திரும்பியுள்ளார்.
கடந்த ஜூன் முதலாம் திகதியன்று ரேணுகருபன் தமது திருமணத்துக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். ஜூன் 8ஆம் திகதியன்று அவரின் திருமணம் இடம்பெறவிருந்தது.
இதன்பின்னர் புதிய மனைவியுடன் ஜூன் 23ஆம் திகதியன்று லண்டன் திரும்ப அவர்திட்டமிட்டிருந்தார். எனினும் யாழ்ப்பாணம் வந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் கடத்திச்சென்றனர்.
விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என க்கூறி வீட்டார் முன்னிலையில் அவர் தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சில நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரின் தேடுதலின் விளைவாக தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர் விடுவிக்கப்பட்டார்
இந்நிலையில் லண்டன் திரும்பியுள்ள அவர் இலங்கை அரசாங்கப்படையினர் இன்னும்சித்திரவதைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்
அவரின் சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் சார்பில் சர்வதேச ரீதியாக வழக்கை பதிவுசெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்
இதன்மூலம் பாதிக்கப்பட்ட தமது கட்சிக்காரருக்கு நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துக்கு உத்தரவிட செய்யப்போவதாகவும் சட்டத்தரணி கீதார்த்தன் தெரிவித்துள்ளார்
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment