உலகிலுள்ள 163 நாடுகளில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்த ஆண்டு சிறப்பாக செயற்பட்ட நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா 2 ஆவது இடம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புராதன முக்கியத்துவம் வாய்ந்த வெபர் விளையாட்டு மைதானத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
உலக சமாதானம் தொடர்பான சர்வதேச அமைப்பு 2016 ஆம் ஆண்டு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்காவிற்கு 2 ஆம் இடத்ததைக் கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையில் உள்நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக அதிக சிரத்தையுடன், செயற்பட்ட 03 நாடுகளை அடையாளப்படுத்தியுள்ளதாகவும் அதிலும் ஸ்ரீலங்காவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஸ்ரீலங்கா 2015 ஆம் ஆண்டு சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பல மாற்றங்களை கண்டுள்ளதாலேயே 18 நாடுகளை பின்தள்ளி 2 ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றது.
ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து இன மக்களும் பேதமின்றி ஒரே இலங்கையராக ஒரே இனமாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என அனைத்து இனங்களையும் சேர்ந்த மில்லியன் கணக்கான குழந்தைகள் இருக்கின்றனர். அந்த அனைத்துக் குழந்தைகளையும் எனது குழந்தைகளாகவே பார்க்கின்றேன்.
அதேபோல் இந்த நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் உட்பட அனைவரும் இன, சமூக, மொழி அடிப்படையிலான சமூகங்களாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டியது அவசியம்.
அதனால் அரசாங்கம் என்ற வகையில் ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து மக்களும் சமாதானமாகவும் சக வாழ்வுடனும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
விஷேடமாக சமாதானத்தை கட்டியெழுப்புவதிலும் பொருளாதார அபிவிருத்தி செய்வதிலும் நாட்டில் வாழும் அனைவருக்கும் பொறுப்புக்கள் இருக்கின்றன. இவற்றை பாகுபடுத்தி செயற்பட முடியாது.
நாம் அனைவரும் ஒவ்வொருவரையும் மதித்து அவர்களுக்கு உரிய தனித்துவங்களை சீர்குலைக்காது வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் இங்குள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் கிழக்கு மாகாணத்திலிருந்து தேசிய பொருளாதாரத்திற்கு பெற்றுக்கொள்ளகூடிய பங்களிப்பு குறித்தும் நாம் சிந்தித்து செயற்பட வேண்டும்.
குறிப்பாக கிழக்கு மாகாணம் விவசாயத்திலும் பாற்பண்ணையிலும் தன்னிறைவு கண்ட மாகாணமாக திகழ்கின்றது. அவை மாத்திரமன்றி மீன்பிடித்துறையிலும் கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்துறைகளிலும் பெரும் முன்னேற்றத்தைக் கண்ட மாகாணமாக கிழக்கு மாகாண சபை திகழ்கின்றது.
அதனால் இவற்றில் இருந்து தேசிய பொருளாதாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment