September 2, 2015

வினாவிற்கு ஆம் என்றால் முற்றுப்புள்ளியாகும் வாழ்க்கை! நடப்பது என்ன? அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாணம் றோட்டறக்ட் கழகம், ஹெல்த்திலங்கா நிறுவனம்(Healthy Lanka) மற்றும் யாழ். மாநகரசபையின் சுகாதாரப்பிரிவு ஆகியன இணைந்து “வினாக்குறியும்(?) முற்றுப்புள்ளியும்(.)” என்னும் தலைப்பில் நல்லூர் உற்சவகாலத்தில் போதைப்பொருள் மற்றும் மதுசாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளது.

இதற்கமைய ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதியில் இருந்து (15 ஆம் திருவிழா) தீர்த்தத் திருவிழாவான 12ஆம் திகதி வரையான தொடர் பத்து நாட்கள் நல்லூர் சுகாதாரப் பணிமனையில் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 8.00 மணிவரை போதைப்பொருள் மற்றும் மதுசாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை இடம் பெறவுள்ளன. இதில் சிறப்பு விழிப்புணர்வுக் கண்காட்சி, நாடக ஆற்றுகை, தனிமனித ஆற்றுகைகள் என்பன இடம் பெறவுள்ளது. அத்துடன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பில் போட்டிகள் நடாத்தப்பட்டு சிறப்பு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
மேலும் குறித்த நிகழ்வுக்கான நிதி அனுசரனையினை யாழ்ப்பாண றோட்டறிக் கழகமும், ஹெல்த்திலங்கா நிறுவனமும் வழங்கியுள்ளதுடன் ஊடக அனுசனையை ரி.ரி.என் செய்தித்தளம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment