நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் குழப்பங்களையும், தமிழர்களின் வாக்குகளையும் சிதைப்பதற்கு விசமத்தனமான நடவடிக்கைகளை தமிழர் பகுதிகளில் இப்பொழுதே மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இந்நிலையில், பொதுத் தேர்தலில் கடுமையான போட்டிகள் உள்ள
நிலையில் அதிக வாக்குகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களில் ஒருவரான முன்னாள் பா.உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரனுக்கு எதிராக விசமத்தனமான பிரச்சாரங்களை சில தமிழ் தேசியத்தை சிதைக்கும் உள்நோக்கத்துடன் ஊடகங்களும், இணையத்தளங்களும், சமூக வலையத்தளங்களும் ஆதாரங்கள் அடிப்படைகள் இன்றி புரளிகளை கிளப்பிவிட்டுள்ளன.

இந் நிலையில் அதற்கு முன்னாள் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இச்செவ்வியின் போது காணாமல் போனோர்கள் தொடர்பான விடயம் ஐ.நா சபையில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை தரும் என தெரிவித்துள்ள அவர் முன்னாள் போராளிகள் தேர்தலில் பங்குபற்றுவது தொடர்பாக எழுந்துள்ள கருத்து நிலைகள் தொடர்ப்பாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதே வேளை கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் முன்னாள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் யோக ரட்ணம் யோகி ஆகியோரை தேர்தலில் இறக்குவது தொடர்பாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் கருத்து வெளியிட்டதாகவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment