நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இதுவரை ஆறு அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுள்ளதுடன் மேலும், இரண்டு சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளதாக யாழ்.மாவட்ட உதவி தேர்தல் பணிமனை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்யும் கால எல்லை எதிர்வரும் 13ஆம் திகதி நண்பகலுடன் முடிவடைகின்றது.
இந்தநிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஆறு அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பபடிவங்களை உதவி தேர்தல் ஆணையாளர் பணிமையில் பெற்றுள்ளனர்.
எனினும் தென்னிலங்கையினை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியே இன்று வரையான காலப்பகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. இதேவேளை, வேட்புமனுதாக்கல் கடந்த 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 13ம் திகதி மதியத்துடன் முடிவுக்குவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment