கடந்த அரசாங்கத்தின் அநீதியான அரசியல் சூழ்நிலையில் பணியாற்ற முடியாது
என பதவியை இராஜினாமா செய்த வந்துரம்ப பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி பீ.எல். கீர்த்திசிங்கவை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் நேற்றைய தினம் முடிவு செய்த நிலையில் இன்று அவர் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து பணிகளை ஆரம்பித்துள்ளார்.
பொதுவேட்பாளர் மைத்ரிபாலவின் பிரச்சார மேடையொன்றை எரியூட்டிய விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு இவரால் கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் பிரதியமைச்சர் நிசாந்த முதுஹெட்டிகம பலவந்தமாக பொலிஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றதன் பின்னணியில் அரசியல் தலையீட்டினால் நியாயமாகப் பணியாற்ற முடியாது போனமையின் அதிருப்தியில் இவர் இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் இன்று பொலிஸ் நிலையம் வந்த அவரை பிரதேச மக்கள் கூடி வரவேற்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment