June 7, 2014

வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை!



வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், தனக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என சிறைத் துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்ற சிறைத் துறை அதிகாரிகள் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.
இதையடுத்து, இன்று காலை 7.30 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு, மருத்துவமனையில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், ரத்த அழுத்தம், உடல் எடை, இ.சி.ஜி. உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் நடத்தினர்.
பிறகு ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment