சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பது குறித்து இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கை அவுஸ்திரேலிய கூட்டு செயற்குழு என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாக நடைபெற்ற இந்தக் கூட்டம் இம்முறை இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் அவுஸ்திரேலிய அதிகாரிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தலைமையில் இலங்கைக் குழுவினரும், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் பிரதி செயலாளர் ராசெல் நோபல் தலைமையில் அவுஸ்திரேலிய குழுவினரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுத்து நிறுத்துதல், புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளல், கைதுகள், தந்திரோபாய தொடர்பாடல்கள், ஏனைய கடற்பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment