June 16, 2016

இலங்கையில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது :ஐ.நா பிரதிநிதி!

இலங்கையில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது இன்றியமையாதது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுயாதீன நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி Mónica Pinto  தெரிவித்துள்ளார்.


நீடித்து நிலைக்கக்கூடிய ஜனநாயகமும் நல்லாட்சியும் நாட்டில் நிலவுகின்றது என்ற இலங்கையை அடையாளப்படுத்த இன்னமும் பல்வேறு மாற்றங்கள் அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை அடுத்த ஆண்டு அமர்வுகளில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தம்மை இலங்கைக்கு அழைத்தமைக்காகவும் , விஜயத்தின் போது ஒத்து
ழைப்பு வழங்கியமைக்காகவும் இலங்கை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

அடிப்படை ரீதியான மாற்றங்களைச் செய்வது குறித்த ஆர்வம் குறைந்து விடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றக் கட்டமைப்பினை சுயாதீனமாக்குவது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment