June 16, 2016

வடக்கின் கல்வி நிலை போர் முடிந்த பின் வீழ்ச்சி! - முதலமைச்சர் வேதனை !

போர் நடந்த காலகட்டத்தில் வட மாகாணத்தில் கல்வி நிலை முன்னேற்றம் கண்டிருந்து, எனினும் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி கண்டு வருகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பரந்தன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

 
வட மாகாணத்தில் கல்வி நிலை வீழ்ச்சியடைவதானது கவலைக்குரிய விடயம். அத்துடன் வடக்கில் கலாச்சார சீரழிவு மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகிறது.

வடக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள போதிலும், படையினரால் மக்கள் பாதுகாக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment