June 16, 2016

வாழைச்சேனையில் 6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து பிரயாண பையில் மறைத்து வைத்த நிலையில்
06 கிலோ கிராம் கஞ்சாவுடன் பதினெட்டு (18) வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரவு நேர கடமையில் பிறைந்துறைச்சேனை பகுதிக்குள் சென்ற பொலிஸ் குழுவினர் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியில் பிரயாண பொதியுடன் இளைஞர் ஒருவரை கண்டு சந்தேகத்தின் பேரில் அவரது பிரயாணப் பையை சோதனையிட்ட போது அவரது பையில் பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா இருந்ததைக் கண்டு குறித்த இளைஞனை கைது செய்துள்ளதுடன் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இருந்து விற்பனைக்காக கஞ்சாவை வாங்கி வந்ததாக, இளைஞர் வாக்கு மூலத்தில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இளைஞனின் தாய் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றத் தண்டனையை மட்டக்களப்பு சிறைச்சாலையில் அனுபவித்து கடந்த எட்டு மாதத்திற்கு முன்னர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.எஸ்.ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞருடன் தொடர்புடைய கஞ்சா வியாபாரிகள் இன்னும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment